WhatsApp Channel
ஐபிஎல் 2024க்கான மினி ஏலம் டிசம்பர் 18 அல்லது 19ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 18 அல்லது 19ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை சமர்பிக்க நவம்பர் 15ம் தேதி கடைசி நாள் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அடுத்த ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்பதுதான் பல ரசிகர்களின் மனதில் எழும் ஒரே கேள்வி.
இந்நிலையில் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியிடம் இருந்து பதில் கிடைத்துள்ளது. அதாவது பெங்களூருவில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் சிஎஸ்கே கேப்டன் தோனி கலந்து கொண்டார்
நிகழ்ச்சியில் பேசிய தொகுப்பாளர் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக கூறினார். அப்போது தோனியுடன் நெருக்கமாக இருந்த ஒருவர் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெற்றுள்ளார் என்று கூறி தவறை சரி செய்தார். தோனி ஆம் என்று சொல்ல, சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
அப்போது தோனியின் கால் அறுவை சிகிச்சை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அறுவை சிகிச்சைக்கு பிறகு காயத்தில் இருந்து மீண்டு விட்டேன். ஆனால் இன்னும் குணமாகவில்லை. நவம்பர் மாதத்துக்குள் அவர் பூரண குணமடைந்து விடுவார் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தோனி தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி கண்டிப்பாக சிஎஸ்கே கேப்டனாக விளையாடுவார் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
Discussion about this post