பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் தனது சாம்பியன் பட்டத்தை பாதுகாத்தார்.
பாரிஸ் நகரில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியில், உலக தரவரிசையில் முதன்மை இடத்தில் உள்ள இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-வது நிலை மற்றும் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராசுடன் நேருக்கு நேர் மோதினார்.
இப்போட்டியில் ஆரம்ப இரண்டு செட்களை சின்னர் 6-4, 7-6 (7-4) என வென்றார்.
ஆனால் அதன் பின்னர் நிகழ்ந்த மூன்று செட்களிலும் கார்லோஸ் அல்கராஸ் கடும் பதட்டம் மத்தியில் 7-6 (7-3), 7-6 (10-2), 6-4 என அபாரமாக வெற்றி பெற்றார்.
மொத்தமாக 5 மணி நேரம் 29 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் அல்கராஸ் 4-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-3), 7-6 (10-2) என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார். கடந்த ஆண்டிலும் அவர் இந்தப் பட்டத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் அல்கராஸுக்கு இது ஐந்தாவது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். மறுபுறம், ஜன்னிக் சின்னர் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டியில் முதன்முறையாக தோல்வியடைந்துள்ளார்.
இத்தகைய ஒரு முடிவுப்போட்டி, ஓபன் யுகத்தில் பிரெஞ்சு ஓபனில் நடந்த மிக நீண்ட நேரம் கொண்ட இறுதிப் போட்டியாகும்.