இந்திய அணி தனது சார்பாக கோப்பையை வென்றது அதிர்ஷ்டமாக உணர்கிறேன் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.
இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கிரிக்கெட் வீரராக கோப்பையை வெல்லும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், சிறப்பாக செயல்பட்டேன்.
இந்திய வீரர்களுக்கு பயிற்சியாளராக வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்த வெற்றிக்காக 2 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததாக குறிப்பிட்டார்.
Discussion about this post