டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இந்திய அணி வீரர்களுக்கு இன்று மாலை 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. போட்டி முடிந்து இந்திய அணி வெஸ்ட் இண்டீசை விட்டு வெளியேற முயற்சித்த நிலையில், புயல் வெஸ்ட் இண்டீசை நெருங்கியது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
புயலின் கரையைத் தாண்டிய பிறகு, இந்திய அணிக்காக (ஏர் இந்தியா சாம்பியன்ஸ் 24 உலகக் கோப்பை) பிசிசிஐ ஏற்பாடு செய்த தனியார் விமானம் அமெரிக்காவின் ஜெர்சி நகரில் இருந்து பார்படாஸில் உள்ள கிராண்ட்லி ஆடம்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில் இந்திய நேரப்படி நேற்று மதியம் 2 மணியளவில் இந்திய அணி வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்ட நிர்வாகிகள், இந்திய பத்திரிகையாளர்கள் விமானம் மூலம் பார்படாஸ் புறப்பட்டு சென்றனர்.
சுமார் 16 மணி நேர பயணத்திற்கு பிறகு விமானம் இன்று காலை டெல்லி சென்றடைந்தது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் கிரிக்கெட் அணியினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதையடுத்து மும்பை வரும் வீரர்கள் வான்கடே மைதானத்தில் பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ள பாராட்டு விழாவில் பங்கேற்பார்கள்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக வீரர்கள் மும்பை விமான நிலையத்தில் இருந்து வான்கடே மைதானத்திற்கு பேருந்தில் பயணிக்கின்றனர். இந்த விழாவில் உலகக் கோப்பையை வென்ற இந்திய வீரர்களுக்கு 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் கூறுகையில், “இந்திய அணி உலக கோப்பை வெற்றியை கொண்டாட எங்களுடன் வெற்றி அணிவகுப்பு! ஜூலை 4-ம் தேதி மாலை 5 மணி முதல் மரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்திற்கு வந்து எங்களுடன் கொண்டாடுங்கள். தேதியை சேமித்துக்கொள்ளுங்கள்” என்று x தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் ரோஹித் ஷர்மா, இந்த சிறப்பு தருணத்தை உங்கள் ரசிகர்கள் அனைவருடனும் அனுபவிக்க விரும்புகிறோம். எனவே இந்த வெற்றியை ஜூலை 4ஆம் தேதி மாலை 5 மணி முதல் மும்பை மரைன் டிரைவ் மற்றும் வான்கடே மைதானத்தில் வெற்றி அணிவகுப்புடன் கொண்டாடுவோம்.
Discussion about this post