மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கெவெம் ஹோட்ஜ் 120 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் போப் 121 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் தரப்பில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 2வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வைட் மற்றும் மைக்கேல் லூயிஸ் களமிறங்கினர். இதில் பிராத்வைட் 48 ரன்களும், மைக்கேல் லூயிஸ் 21 ரன்களும், தொடர்ந்து வந்த கிர்க் மெக்கென்சி 11 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
கவேம் ஹாட்ஜ் மற்றும் அலிக் அதானாஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தனர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அலிக் அதானாஸ் 82 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜேசன் ஹோல்டர் களம் இறங்கினார்.
மறுபுறம் நிதானமாக விளையாடிய கேவெம் ஹாட்ஜ் அசத்தலான சதம் அடித்தார். அவர் 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோஷ்வா டா சில்வா களம் இறங்கினார். இறுதியாக 2வது நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 84 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்துள்ளது.
ஜேசன் ஹோல்டர் 23 ரன்களுடனும், ஜோசுவா டா சில்வா 32 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் இன்னும் 65 ரன்கள் பின்தங்கியுள்ளது. 3வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.
Discussion about this post