இந்திய ஒலிம்பிக் மல்யுத்த வீரர் வினேஷ் போகட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா இதுவரை 3 வெண்கலப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 60வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், ஒலிம்பிக் மல்யுத்த பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவுக்கான அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் வினேஷ் போகட், கியூபா வீரர் யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபனை எதிர்கொண்டார்.
ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்தியாவின் வினேஷ் போகட் ஆதிக்கம் செலுத்தினார். ஆட்டத்தின் முடிவில் இந்திய வீரர் வினேஷ் போகட் 5-0 என்ற கோல் கணக்கில் கியூபா வீரர் குஸ்மானை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தப் பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கமாவது உறுதி. இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது.
Discussion about this post