பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. 206 தேசிய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு விழா இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியாவிலிருந்து 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் (இந்திய நேரப்படி):-
தடகளம்:- சூரஜ் பன்வார், பிரியங்கா கோஸ்வாமி (மாரத்தான் நடைபயிற்சி கலப்பு அணிகள்), காலை 11 மணி. சர்வேஷ் குஷலே (ஆண்கள் உயரம் தாண்டுதல் தகுதி), மதியம் 1.35. ஜோதி யர்ராஜி (பெண்களுக்கான 100மீ தடை ஓட்டம் தகுதிச்சுற்று), மதியம் 1 45 மணி. அப்துல்லா, பிரவீன் சித்ரவேல் (ஆண்கள் டிரிபிள் ஜம்ப் தகுதிச்சுற்று), இரவு 10.45 மணி. அவினாஷ் சேபிள் (ஆண்கள் 3000மீ ஸ்டீபிள்சேஸ் இறுதி), மதியம் 1.13 மணி.
கோல்ப்:- அதிதி அசோக், தீக்ஷா தாகர் (மகளிர் முதல் சுற்று), மதியம் 12.30 மணி.
டேபிள் டென்னிஸ்:- இந்தியா vs ஜெர்மனி (பெண்கள் காலிறுதி), மதியம் 1 30 மணி.
மல்யுத்தம்:- ஆந்திம் பன்ஹால் (இந்தியா)- ஜெய்னெப் யெட்கில் (துருக்கி), (பெண்களுக்கான 53 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரி-குவார்ட்டர் சுற்று), மதியம் 2.30 மணி. வினேஷ் போகட் (இந்தியா)-சாரா ஹில்டெப்ராண்ட் (அமெரிக்கா) (பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் இறுதிப் போட்டி), நள்ளிரவு 12 மணி.
பளு தூக்குதல்:- மீராபாய் சானு (பெண்கள் 49 கிலோ) இரவு 11 மணி.
Discussion about this post