இறுதிப் போட்டிக்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட், விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
100 கிராம் உடல் எடை அதிகரித்ததாகக் கூறி இந்த செயலால் அதிர்ச்சியடைந்த வினேஷ் போகட், பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், இறுதிப் போட்டிக்கு முன்பாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட், அதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இறுதிப் போட்டி வரை எடை சரியாக இருந்ததால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், வினேஷ் போகட் வழக்கில் அனைத்து தரப்பினரும் விசாரிக்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்குள் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினேஷ் போகட் வழக்கை நீதிபதி அன்னாபெல் பென்னட் விசாரிப்பார் என்று விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Discussion about this post