பாரீஸ் ஒலிம்பிக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
33வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் 3 கோல்கள் அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 3-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 2வது பாதியில் பிரான்ஸ் வீரர்கள் தீவிர ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதன் காரணமாக ஆட்டத்தின் 2வது பாதியில் அந்த அணி 2 கோல்கள் அடித்தது. இதன் காரணமாக ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்களை அடித்திருந்தன. இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.
கூடுதல் நேரத்தில் சிறப்பான ஆட்டத்தால் ஸ்பெயின் வீரர்கள் மேலும் இரண்டு கோல்களை அடித்தனர். முடிவில் ஸ்பெயின் அணி 5-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. பிரான்ஸ் வெள்ளிப் பதக்கம் வென்றது.
பிரான்ஸ் தரப்பில் என்ஸோ மில்லட் (11வது நிமிடம்), மேக்னஸ் அக்லியோச் (79வது நிமிடம்), ஜீன் பிலிப் மாடெட்டா (90+3வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஸ்பெயின் தரப்பில் பெர்மின் லோபஸ் (18வது மற்றும் 25வது நிமிடம்), செர்ஜியோ அமெல்லோ (100வது மற்றும் 120வது+1வது நிமிடம்) தலா 2 கோல்களும், அலெக்ஸ் பெனா (28வது நிமிடம்) ஒரு கோலும் அடித்தனர்.
Discussion about this post