வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாகும். இந்த தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டியிலும், 2வது போட்டி கராச்சியிலும் நடக்கிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான டிக்கெட் விலை விவரங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால், குறைந்தபட்ச டிக்கெட் விலை வெறும் 50 ரூபாய் (பாகிஸ்தான் ரூபாயில்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் 15 ரூபாய் மட்டுமே என ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
பாகிஸ்தான் – வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடரை காண ரசிகர்கள் வரமாட்டார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், அதிகபட்ச குளிரூட்டப்பட்ட டிக்கெட் விலை 2,50,000 பாகிஸ்தான் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் வி.ஐ.பி. டிக்கெட் 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் 500 – 600 பாகிஸ்தான் ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும். இந்த அறிவிப்பு பாகிஸ்தான் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post