தென்னாப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே முதல் டெஸ்ட் தொடர் நடைபெற்றது.
முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கயானாவில் கடந்த 15ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் தென்னாப்பிரிக்கா 160 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 144 ரன்களும் எடுத்தன. 16 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 2வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.
நேற்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 80.4 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் கைல் வெர்ன் மற்றும் மார்க்ரம் அரைசதம் அடித்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தென்னாப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 66.2 ஓவரில் 222 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய தென்னாபிரிக்க தரப்பில் குடகேஷ் மோதி அதிகபட்சமாக 45 ஓட்டங்களையும், ரபாடா மற்றும் கேசவ் மஹராஜ் தலா 3 விக்கெட்டுகளையும், டான் பீட் மற்றும் வியன் முல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்கா 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை வியன் முல்டரும், தொடர் நாயகன் விருதை கேசவ் மகராஜும் தட்டிச் சென்றனர்.
Discussion about this post