இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயப் பஷீர் தலா 3 விக்கெட்டுகளையும், அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக இருப்பதால் இரு அணிகளுக்கும் இது முக்கியமான தொடராக கருதப்படுகிறது. இதனிடையே இங்கிலாந்து அணியின் வழக்கமான டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகியதால் புதிய கேப்டனாக ஒல்லி போப் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணிக்கு தனஞ்சய டி சில்வா தலைமை தாங்குகிறார். இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராபோர்டில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தனஞ்சய டி சில்வா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் கருணாரத்ன 2 ரன்களும், நிஷான் மதுஷ்க 4 ரன்களும், மேத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தனர். தொடர்ந்து, குசல் மெண்டிஸ் 24 ரன்களும், சண்டிமால் 17 ரன்களும் எடுத்தனர்.
தனஞ்சய டி சில்வா மற்றும் ரத்னநாயக்க இருவரும் சிறப்பாக விளையாடினர். நிதானமாக விளையாடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் ரத்னநாயக்க 72 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
இறுதியில் இலங்கை முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ், சோயப் பஷீர் தலா 3 விக்கெட்டுகளையும், அட்கின்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது.
Discussion about this post