ஜோஷ் ஹல் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. முதல் போட்டி முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 29ம் தேதி துவங்க உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜோஷ் ஹல் சேர்க்கப்பட்டுள்ளார்.
Discussion about this post