இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) விளையாடுகிறது. இந்தத் தொடர் நவம்பர் 22ஆம் தேதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணியை தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் தொடரில் வீழ்த்துமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த தொடரில் சிறப்பாக செயல்பட பும்ராவுக்கு தற்போது முழு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முகமது ஷமி காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். எனவே அடுத்த ஆஸ்திரேலிய தொடரில் பும்ரா, ஷமி, சிராஜ் என வலுவான வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க உள்ளது இந்தியா.
ஆஸ்திரேலியா போன்ற ஸ்விங் மற்றும் வேகத்துக்கு ஏற்ற சூழல்களில் பும்ராவை விட சிராஜ் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாரத் அருண் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “முதல் தர கிரிக்கெட்டில் விளையாடும் போது, உங்களுக்கு ஆதரவில்லாத ஆடுகளங்களில் அடிக்கடி பந்துவீசுவீர்கள். அங்கு நீங்கள் கொஞ்சம் தந்திரமாக வெளியே வர வேண்டும் அல்லது எப்படி மாற்றுவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். நமது நாட்டின் நிலைமைக்கு ஏற்றவாறு பந்து வீசியது சிராஜ் மற்றும் “அது ஷமிக்கு பெரிதும் உதவியது. அதனால்தான் சிராஜ் உலக கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான பந்துவீச்சாளர்களில் ஒருவராக உள்ளார்.
Discussion about this post