கும்பகோணம் ரயில் நிலையத்தில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அகில இந்திய சன்னியாசி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா வலியுறுத்தியுள்ளார்.
கும்பகோணத்தில் நடைபெறவிருக்கும் மாசிமக விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய சன்னியாசி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதாந்த ஆனந்தா, மாசிமக விழாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கும்பகோணம் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மாசிமக விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post