WhatsApp Channel
விருத்தாசலம் கொளஞ்சயப்பர் கோயில் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கொளஞ்சயப்பர் கோவில் அருகே சேலத்தில் இருந்து நெய்வேலி நோக்கி வந்த அரசு பேருந்து சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.
இதில், பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Discussion about this post