WhatsApp Channel
அத்திப்பள்ளியில் நடந்த பட்டாசு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் சாலையின் இருபுறமும் ஏராளமான பட்டாசு கடைகள், குடோன்கள் உள்ளன. தீபாவளி பண்டிகையையொட்டி இங்கு அதிகளவில் பட்டாசு கடைகள் அமைக்கப்படும். கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடைகளுக்கு 3 சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் அடங்கிய அட்டை பெட்டிகள் வந்தன. அப்போது, பட்டாசு பெட்டிகளை இறக்கும் போது, திடீரென பட்டாசு வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பட்டாசுக் கடை வெடி விபத்து குறித்து விசாரணை நடத்த 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாசு உரிமம் மற்றும் தீ விபத்து குறித்து தனி போலீஸ் படை விசாரணை நடத்த உள்ளது. மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களிடம் இருந்து புகார் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்து தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் தருமபுரியில் இருந்து பட்டாசுகள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.
Discussion about this post