WhatsApp Channel
குடியரசுத் தலைவர் ஆளுநர் மாளிகையில் தங்கி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் நடைபெறவுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திராருபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி கவுரவிக்கிறார். இதற்காக ஜனாதிபதி திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை சென்னை வருகிறார்.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு தாக்குதலை அடுத்து பழைய விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சென்னை பயணத்தில் தற்போது வரை மாற்றம் இல்லை என டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் ஆளுநர் மாளிகையில் தங்கி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பார் என்றும் டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post