WhatsApp Channel
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுகிறது. இதையடுத்து, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று வெளியிட்டார். அதன்பின், சத்யபிரதா சாகு கூறியதாவது:
தமிழக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். மாவட்ட அளவிலான பட்டியல் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்படும். தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்யலாம்.
பெயர் சேர்ப்புக்கு நேரடியாக வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாகவும், என்விஎஸ்பி இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நவம்பர் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். டிசம்பர் 19ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Discussion about this post