திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஆறு லட்சம் இந்துக்களை மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என்று மிஷனரிகளுக்கு போலி மதபோதகர் மோகன் சி லாசரஸ் கட்டளையிட்ட வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மத மாற்றத்தைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கிறிஸ்தவ போலி மத போதகர் மோகன் சி லாசரஸ் இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்று பல இடங்களில் மிஷனரிகளிடம் தெரிவித்து வருகிறார். ஜெபக்கூட்டம் என்ற பெயரில் ஆட்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்களிடம் இந்து மதத்தை பற்றி தவறாக பேசியும் இந்துக்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறிவரும் இவர் இந்துக்களை வற்புறுத்தி மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
அண்மையில் போலி மதக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் சி லாசரஸ் “இங்கே இந்துக்கள் 6 லட்சம் பேர் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரையாவது நீங்கள் மதமாற்றம் செய்ய வேண்டும். உங்களை தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்யுங்கள் என்று நான் கூறவில்லை. நீங்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் போதும், பேருந்து நிலையத்தில் நிற்கும் போதும், வேலை செய்யும் இடத்தில் பேசும் போதும் ஒருவரை பிடியுங்கள். அவர்களிடம் நட்பு கொள்ளுங்கள் பிறகு அவர்களிடம் சுவிசேஷம் செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
‘ஒருவரையாவது மதமாற்றம் செய்வேன் என்று ஆண்டவரிடம் சொல்லுங்கள். இவ்வாறு செய்வதை விட்டுவிட்டு உங்கள் சபையில் இருந்து பக்கத்து சபையில் உள்ளவரையும் பக்கத்து சபையிலிருந்து இங்கு உள்ள வரை மட்டுமே நீங்கள் சுவிசேஷம் செய்து தொட்டியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வெளியே வந்து கடலில் மீன் பிடிக்க வேண்டும். வெளியில் வாருங்கள் 6 லட்சம் இந்து ஆத்மாக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை பிடிக்கும் திட்டம் எதுவும் இல்லை” என்று அவரிடம் போதனை கேட்க வந்த ஊழியம் செய்து கொண்டிருப்பவர்களை தங்களின் இலக்கை கூடிய விரைவில் அடையுமாறு மோகன் சி லாசரஸ் வலியுறுத்தியுள்ளார்.
நீங்கள் இங்கு இருப்பவர்களை மட்டுமே மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தங்களது சபைக்கு கீழே இருக்கும் இந்துக்களில் இருந்து கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களின் உறவினர்களை குறிப்பிட்டு கூறியுள்ளார். ஆனால் நீங்கள் மதம் மாற்ற வேண்டியவர்கள் அவர்கள் அல்ல. வெளியில் ஆறு லட்சம் இந்துக்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு சுவிசேஷம் செய்யுங்கள் அதாவது மதம் மாற்றுவதற்கு ஏதுவாக அவர்களிடம் இயேசுவைப் பற்றி பேசுங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் ஒவ்வொருவருக்கும் முதல் கடமையாக ஒருவரை மதமாற்றம் செய்ய வேண்டும் என்பதை வைத்துக் கொள்ளுங்கள் என்று மோகன் சி லாசரஸ் பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்களை போன்றவர்கள் இன்னும் 10 ஆண்டுகள் மதம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தால் பத்து ஆண்டுகள் கழித்து இந்து மதமே அழிந்தாலும் அழிந்துவிடும் என்று சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எனவே இதுபோன்ற மதமாற்று சக்திகளுக்கு பாடம் புகட்டும் விதமாக மத மாற்றத்திற்கு எதிரான கடுமையான சட்டங்கள் இந்தியாவில் இயற்றப்பட வேண்டும் என்றும் மதம் மாற்ற நினைக்கும் சக்திகளுக்கு சட்டரீதியாக தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று பல வருடங்களாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post