12வகுப்பு பொதுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும்… முதல்வருக்கு சரத்குமார் வைத்த கோரிக்கை…! 12th class general examination must be held … Sarathkumar’s request to the first …!
தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக +2 பொதுத்தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று நடந்த சட்டமன்ற பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் கூட +2ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டுமென பெரும்பாலான கட்சி பிரதிநிதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்துள்ள நிலையில், தமிழக அரசு கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கேட்டு வருகிறது. அதில் பெரும்பான்மையான பெற்றோர்கள் கொரோனா தாக்கம் குறைந்த பிறகு தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிப்பதாகவே அறிகிறேன்.
தற்போதைய கொரோனா சூழலில், மாணவர்களின் பாதுகாப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்பதை அனைவரும் அறிவோம். அதே அளவிற்கு, கல்வியில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்படும் தமிழ்நாடு அறிவார்ந்த எதிர்கால சமுதாயத்தை உருவாக்குவதற்கு தேர்வு நடத்தப்படுவதும் அவசியம். ஆனால், இந்த இக்கட்டான 2-வது அலை தாக்கத்தில் மாணவர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நன்கு ஆராய்ந்து, ஒரு வகுப்பறையில் 10 மாணவர்களுக்கு மிகாமல் பகுதியாக பிரித்து தேர்வு நடத்த வாய்ப்பிருந்தால், கொரோனா சூழல் கட்டுக்குள் வந்தபின்பு நடத்த வேண்டும்.
ஏனெனில், தற்போதைய சூழலால் உயர்கல்விக்கு அடித்தளமான 12 ஆம் வகுப்பு தேர்வுகளை சந்திக்காமல் மாணவர்கள் கடந்து செல்வார்களேயானால், நிச்சயம் வேலைவாய்ப்பில் பல்வேறு சிக்கல்களை சந்திப்பார்கள். ஏற்கெனவே வேலைவாய்ப்பின்றி லட்சக்கணக்கான இளைஞர்கள் அவதியுறும்சூழலில், இந்த மாணவர்களும் பாதிக்கப்படக்கூடாது. எனவே, மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகாதபடி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து தேர்வு நடத்த வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழக அரசிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் அரசியல் நிலவரம்: புதிய காங்கிரஸ் ஆட்சி மற்றும் அதன் பிறகான உள்நாட்டு சிக்கல்கள் காஷ்மீர், இந்திய அரசியலில் ஒரு நுண்ணிய மற்றும் தடுமாறும் பிரதேசமாக இருந்தது....
லெபனான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசாவில் ஹமாஸ் போராளிகள் கட்டியெழுப்பியது போல், ஹிஸ்புல்லா போராளிகள் லெபனானில் ஏராளமான சுரங்கங்களை கட்டியுள்ளனர். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு சுரங்கம்...
மற்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்ற விதி அதிமுகவில் இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டது தவறானது என்றும் அவர்...
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி வாழ்த்து பெற்றார். இந்நிலையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை பிரதமர் மோடி சந்தித்து,...
Discussion about this post