சென்னை கே.கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் ஆசிரியரான ராஜகோபாலன், பள்ளியில் பயின்று வந்த மனைவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். மேலும், மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசுதல், இணையதள வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் தோன்றுதல் என அட்டகாசம் செய்து வந்துள்ளான்.
இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் ஆகியோர் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க தொடங்கியதை அடுத்து, கடந்த 24 ஆம் தேதி காமுகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அவனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ராஜகோபாலன் தரப்பில் தொடுக்கப்பட்ட ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்ட ராஜகோபாலன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரருக்கு ஜாமீன் இவ்வழக்கில் வழங்க முடியாது, விசாரணை இன்னும் நிறைவு பெறாததால் ராஜகோபாலனுக்கு ஜாமின் வழங்க இயலாது என்று நீதிபதி முகமது பாருக் தெரிவித்துள்ளார்.
Discussion about this post