அப்படி ஒரு காலம் இருந்தது. காமராஜர், கக்கன்னு பேரச் சொல்லி நாம புளங்காகிதம் அடைஞ்ச காலம். அப்புறமா பாட புஸ்தகத்துல மட்டுமே இப்படியெல்லாம் அரசியல் நாகரிகம் தெரிஞ்ச தலைவர்கள் இருந்தாங்கன்னு படிச்சுக்கிட்டு இருந்தோம்.
விஷயம் அது கிடையாது.
இந்த முறை ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, நிறைய விஷயங்களில் முரண்பட்டு கிடக்குது. தன்னுடைய முந்தைய கால பார்முலாக்களையும், அடாவடித்தனங்களையும் மொத்தமா ஏறக்கட்டியிருக்கு என்கிறார்கள்.
இதில் உதயநிதி செய்யும் ஹைலைட் எல்லாமே பகீர் ரகம் என்கிறார்கள். தினந்தோறும் சேப்பாக்கத்திற்கு வந்து விடும் உதயநிதி, ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்கிறாராம். நேற்று திடீரென திருவல்லிக்கேணி பகுதியில், காட்டுக்கோயில் தெருவில் இருக்கும் அம்மா உணவகத்திற்குள் நுழைந்து விட்டார். உடன் சென்ற தொண்டர்கள் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று தெரியாமல் பதறியபடியே நின்று கொண்டிருந்தார்கள். பின்னர் சுதாரித்துக் கொண்டு அவர் பின்னால் அம்மா உணவகத்திற்குள் நுழைந்தார்கள். அதன் பின்னர் அம்மா உணவகத்தில் உணவை சாப்பிட்டு பார்த்து, சாப்பாட்டின் தரத்தை பரிபரிசோதிததர.
பின்னர் அங்கிருந்த பணியாளர்களிடம் உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்கச் சொல்லிவிட்டு, சமையலுக்கு தேவையான பொருட்களின் இருப்பு, தினசரி வருவாய் போன்றவற்றையும் ஆய்வு செய்து விட்டு கிளம்பினார். இனி தமிழகம் ஒளிர்கிறதோ இல்லையோ.. தமிழகத்தில் சேப்பாக்கம் தனியே ஒளிரும் என்கிறார்கள்.
Discussion about this post