தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22,651 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 21,95,402ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 2,810, சென்னையில் 1,971 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 463 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 26,128 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 33,646 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,00,306 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 2,68,968 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 1,63,818 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post