பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீசார் சுமார் 250 கேள்விகளை முன் வைத்து விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை எழுப்பிய கேள்விக்கு எழுத்து வடிவில் ராஜகோபாலன் பதில் அளித்ததாக தெரிகிறது.
சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசியராக இருந்தவர் ராஜகோபால், இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரில் ராஜகோபால் 24 ஆம் தேதி கைதானார். இந்த நிலையில் ராஜகோபால் ஜாமீன் கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மற்றும் ராஜகோபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த நிலையில், ராஜகோபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு நீதிபதி முகமது பரூக் முன்பு காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி பெற்றனர். இதையடுத்து அவரிடம் கடந்த 3 நாட்களாக நூற்றுக்கணக்கான கேள்விகளை கேட்டு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். குறிப்பாக 5 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் ராஜகோபாலனிடம் ஒரு மாணவியின் புகாருக்கு 50 கேள்விகள் என தலா 250 கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த 250 கேள்விகளுக்கும் ராஜகோபாலன் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படி போலீசார் தெரிவித்தனர். அதன்படி ராஜகோபாலன் கேள்விகளுக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்துள்ளார். குறிப்பாக இந்த தவறுகள் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிந்தே நடந்ததா.? என்ற வகையிலும் கேள்வி எடுக்கப்பட்டதாக தெரிகிறது, மேலும் மாணவர்களின் பாலுணர்வை தூண்டும் வகையில் நடந்து கொண்டது, அரை நிர்மாணமாக ஆன்லைன் வகுப்பின் தோன்றியது, ஆபாச வீடியோ அனுப்பியது உள்ளிட்டவை குறித்த கேள்விகளும் அதில் இடம்பெற்றிருந்தது.
ஆன்லைனில் வரும் மாணவிகளை வீடியோ எடுத்து ராஜகோபாலன் ரசித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ராஜகோபாலன் தொடர்பான பல்வேறு ஆதாரங்களை வைத்து போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதாரங்களில் அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் காவல் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநில தினங்களை அரசு விழாவாக கொண்டாடும் அவசியம் மாநில தினங்களை அரசு விழாவாக கொண்டாடும் கேள்வியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முன்வைத்தது மிக முக்கியமான விவாதத்தை எழுப்பியுள்ளது....
இலங்கைக்கு கச்சத்தீவை வழங்கியது இந்திரா காந்தியின் ராஜதந்திரம் என்று கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியான கேள்விகளை...
மத்திய பட்ஜெட் 2025: ஜவுளித்துறையின் எதிர்பார்ப்புகள் மற்றும் புதிய தீர்வுகள் இந்தியாவின் 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை எதிர்நோக்கி, தொழில்துறைகள் பலவும் தங்கள் தேவைகள் மற்றும்...
மகளிருக்கு மாதம் ரூ.2,500 மற்றும் தீபாவளி, ஹோலிக்கு இலவச சிலிண்டர் – பாஜகவின் வாக்குறுதிகள்: விரிவான பார்வை பாஜக, டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அறிவித்து, மக்களிடையே...
Discussion about this post