தமிழகத்தில் ஜூலை மாதம் வரை ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..
தமிழகத்தில் கொரோனோ தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 10-ம் தேதி முதல் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்தது.. எனினும் நோய் தொற்று கட்டுக்குள் வராததால், தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தேவையான காய்கறி, பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன..
இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.. மளிகைக்கடை உரிமையாளர்கள் வாகனங்கள் மூலம் மளிகைப் பொருட்களை விற்பனை செய்யலாம்.. ஆன்லைன் அல்லது தொலைபேசி மூலம் ஆர்டர் செய்தால் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்களை விற்கவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் மளிகை பொருட்களை விற்பனை செய்யலாம்.. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வீடுகளுக்கு சென்று மளிகைப் பொருட்கள் வழங்கா அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது..
இந்நிலையில் தளர்வுகற்ற ஊரடங்கின் பலன் தெரியத் தொடங்கியுள்ளது.. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருகிறது.. ஒருநாள் பாதிப்பு சராசரியாக 35,000 என்று பதிவான நிலையில் நேற்று 25,000-க்கும் குறைவான பாதிப்பு பதிவானது.. இந்த சூழலில் முழு ஊரடங்கை தளர்த்தினால் மீண்டும் பாதிப்பு உயரும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எனவே அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் முதலில் அனுமதி வழங்கிவிட்டு, பிறகு படிப்படியாக தளர்வுகளை அறிவிக்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.. எனவே ஜூலை மாதம் வரை பகுதி ஊரடங்கை அமல்படுத்தினால் மட்டுமே நோய் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
Discussion about this post