தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு 45 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்ததாக தமிழக அரசு சார்பில் தகவல்.
தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய அத்தியாவசிய ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க கூடிய வகையில் தமிழகத்திலேயே அதன் உற்பத்தியை துவங்குவதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சமீபத்தில் ஆணை பிறப்பித்திருந்தார்.
அதன்படி, தொழில் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தோடு (TIDCO) இணைந்து தமிழகத்திற்கு உயிர் காக்கும் மருந்துகள், தடுப்பூசி ஆகியவற்றை தயாரிக்க விருப்பம் உள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் அதற்கான கால அவகாசம் மே 31-ஆம் தேதி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது வரை 45 இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளதாக தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post