புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முதலாக கருப்பு பூஞ்சை நோயால் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு இதுவரை 8 பேர் கரும்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இறந்து வந்த நிலையில் முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் கரும்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவர் வெள்ளக்கொல்லையைச் சேர்ந்த செல்வராஜ் (55) என்று தெரியவந்துள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து 10 நாட்களுக்கு மேலாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்தார்..
அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு அறந்தாங்கி நகராட்சி பணியாளர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு தேவையான தடுப்பூசி கிடைக்காததால் செல்வராஜ் உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
Discussion about this post