கஸ்பர் தமிழக கத்தோலிக்க அருட்தந்தையாகி சேவை செய்ய வந்தபொழுதே ஒருமாதிரி தமிழ் புரட்சி பாதிரியாக இருந்தார், அவரை முழங்காலில் நிறுத்தி கத்தோலிக்க குரு சாதி, இனம் மொழிக்கு அப்பாற்பட்டவன் என கத்தோலிக்க பீடமும் போதிக்கவில்லை
காரணம் அவர்கள் கொள்கையே இந்துவிரோதம் இந்திய விரோதம் என்பது போல் இருந்ததால் விட்டுவிட்டார்கள்
சாந்தோம் கலை பண்பாட்டில் ஏதோ செய்து கொண்டிருந்தார் கஸ்பர்
இந்த இடத்தில் கத்தோலிக்க பாதிரிகளின் தேர்வு பற்றி சொல்ல வேண்டும், மிக வறுமையான அல்லது பின் தங்கிய இடங்களில் இருந்து மிக கவனமாக பாதிரி படிப்புக்கு கிறிஸ்தவ மேலிடம் தேர்ந்தெடுக்கும், காரணம் வாழ வழியிருப்பவன் பெரும்பாலும் அங்கு செல்வதில்லை
படிக்க வரும் அம்மாணவர்களில் மிக சிறந்தவர்களை அவர்கள் களபணிக்கு அனுப்புவதில்லை, நிர்வாகம் திட்டமிடலுக்கு வைத்து கொள்வார்கள், இம்போஷிஷன் கோஷ்டி, முழங்கால் கோஷ்டி போன்ற கடைசி பெஞ்சி மாணவர்கள்தான் பாதிரியாக வருவார்கள்
இப்படி களபணிக்கு வந்த கஸ்பர் அப்பொழுதே பக்தி, வழிபாடுகளை விட்டுவிட்டு கலை இலக்கியம் என சாந்தோம் பக்கம் சுற்றி திரிந்தார், பின் பிலிப்பைன்ஸில் சி.ஐ.ஏ நடத்தும் “ரேடியோ ஆப் வத்திக்கானா” எனும் வானொலியில் சேர்க்கபட்டார்
அது அமெரிக்க உளவு நிறுவணத்தால் நடத்தபடும் ரேடியோ என்றாலும் ஈழ விவகாரம் ஒன்றில் தலையிட்டு அங்கு நுழைந்தது
அதாவது போரில் காணாமல் போன உறவுகளை கண்டுபிடித்து ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சி அது, கஸ்பர் சாமி அங்கே நுழைந்தது இப்படித்தான்
ஏற்கனவே ஈழ போரினை தூண்டிவிட்டு நடத்திய மேற்குலகம் கஸ்பரை கொஞ்சம் நுணுக்கமாக உள்ளே இழுத்துவிட்டது, கஸ்பர் புலிகளை தமிழகத்தை இணைக்கும் சங்கிலியானார்
தமிழ் தமிழர் என கஸ்பர் உருக ஆரம்பித்தது அப்படித்தான்
தமிழக அரசியல் நிலைபாட்டை எடுக்கும் மர்ம சக்திகள் சில, அதாவது ஈழ போராட்டத்தை ஊக்குவித்த அந்த மர்ம சக்திகள், தமிழகம் டெல்லிக்கு எதிராக எப்பொழுதும் இருக்க வேண்டும் என கணக்கிட்ட சக்திகளின் முகமூடியனார் கஸ்பர்
அப்படித்தான் தமிழ்வெறியில் திருவாசகத்தை பாட போகின்றேன் என இளையராஜாவினை கூட்டி திரிந்தார்
அதை ஏன் லண்டனில் பாடலாக்கினார் என்றால் அங்கேதான் இருக்கின்றது விஷயம்
அது புலிகள் தமிழ்நாட்டில் மறுபடி காலூன்ற முயற்சித்த காலம், பாரதிராஜா சீமான் என எல்லோரும் வன்னிகாட்டுக்கு காவடி எடுத்த காலம்
இதில் முந்திகொண்டவர் கஸ்பர், பிரபாகரன் எனக்கு இறால் கொடுத்தார், மீன் கொடுத்தார் என்பதையெல்லாம் இவர்தான் தொடங்கி வைத்தார்
புலிகளுக்கு லண்டனில் பெரும் சொத்து உண்டு, பெரும் ஹோட்டல்கள் உண்டு அந்த பின்னணியில்தான் இளையராஜாவினை அழைத்து திருவாசகம் பாட சென்றார் பாதிரி
ஆனால் உண்மையில் லண்டன் புலி சொத்துக்களை கண்டு வாயடைத்து நின்றார்
இதனிடையே மர்ம சக்திகள் அப்பொழுது அரசியலுக்கு வந்திருந்த கவிதாயினி கனிமொழியுடன் இவரை தமிழ் ஆர்வலர் என கோர்த்துவிட்டன, திமுகவின் அடுத்த வாரிசு கனிமொழி என்ற அளவில் அவைகள் காய் நகர்த்தின
சங்கமம் ஆட்டமெல்லாம் இப்படித்தான் தொடங்கிற்று
இது தமிழ் தமிழர் அப்படியே புலிகள் அதன் பின்னால் கிறிஸ்தவ அமைப்புக்கள் என ஒரு வலைபின்னல் தமிழரை பிரபாகரன் மிரட்டுவார், பிரபாகரனை பாதிரிகள் மிரட்டுவார்கள் என்ற ரீதியில் செல்லும்
இந்நிலையில்தான் ஈழத்தில் யுத்தம் தொடங்கும் முன் பாலசிங்கம் அமைதி பேச்சுவார்த்தையில் வெறுப்படைந்து ஈழ விவகாரத்தில் இருந்து ஒதுங்கினார்
அந்த லண்டன் இடம் காலியாயிற்று, அதோடு புலி தலமை பிரபாகரன் ஆயுதம் வாங்க கே பத்மநாபனை ஓரங்கட்டி காஸ்ட்ரோ என்பவரை நியமித்தான்
(இப்பொழுது சு.சாமி குற்றசாட்டின் படி புலிகளுக்கு ஆயுதம் வாங்க கஸ்பர் உதவினார் என்பது, அப்பொழுது ஏகபட்ட புலிகள் ஆயுதம் வாங்க தெரியாமல் வாங்கி அமெரிக்காவில் சிக்கிய காட்சி நடந்தது
அதில்தான் கஸ்பருக்கு தொடர்பு என்கின்றார் சாமி)
லண்டன் என்றால் ஏராளமான சொத்துக்கள், புலி சொத்துக்கள் என பொருள்
பாதிரி உள்ளிட்ட பலரின் கண் அங்கே விழுந்தது, அத்தோடு யுத்தமும் தொடங்கி பிரபாகரனும் கொல்லபட்டான்
பாதிரி அப்பொழுது எப்படியெல்லாமோ ஆடிபார்த்தது கண்டுகொள்ள யாருமில்லை, அதன் பின் பாதிரியினை ஓரங்கட்டி சைமன் எங்கோ சென்றுவிட்டார்
பாதிரி கனிமொழியுடன் சங்கமமெல்லாம் நடத்தி கொண்டிருந்தார், அப்பொழுதுதான் ஸ்பெக்ட்ரம் பணம் வெள்ளமென வந்தது, பாதிரி மேல் பல குற்றசாட்டும் வந்தது
2010க்கு பின் புலிகள் இயக்கம் இரண்டாக உடைந்தது, ஈழத்துக்காக அல்ல புலி சொத்துக்காக
பல்லாயிரம் டாலர் சொத்துக்களை நிர்வகிப்பது யார் என்பதில் விநாயகம் என்பவரும் நெடியவன் என்பவரும் மோதி கொண்டார்கள் , துப்பாக்கி சூடெல்லாம் நடந்தது
பல எதிர்ப்புகள் கிளம்ப “நிர்வாகிகள்” ஈழபோராட்டத்தை முன்னெடுப்பதாக சொல்லி, அதற்கு சொத்துக்களை காப்பதாக சொல்லி சில காரியங்களை செய்தனர்
அந்த கணக்குக்கு காட்ட இங்கு உருவாக்கபட்டதில் சைமனும், கஸ்பரும் முக்கியமானவர்கள்
இப்படி ஈழத்தை நாடு கடத்தி, தமிழ்நாட்டில் ஈழபோராட்டம் நடத்திய கணக்கு காட்டிவிட்டு அவர்கள் சொத்தை அமுக்கி கொண்டனர்
அடுத்து என்ன செய்யலாம் என பாதிரி யோசித்து பல தொண்டு நிறுவணங்களை தொடங்கினார் அதில் சர்ச்சைகள் பல வந்தார்
இந்நிலையில்தான் மோடி பதவிக்கு வந்தார், பல முறைகேடான தொண்டு நிறுவணம் மேல் கைவைத்தார், பாதிரி மோடியின் எதிரியாகிவிட்டார்
சுமார் 6 ஆண்டு காலம் மோடி எதிர்ப்பினை தென்னகம் முழுக்க குறிப்பாக தென் கடற்கரையோரமெல்லாம் பரப்பினார், அதில் இந்திய எதிர்ப்பே பிரதானம்
இதில் கனிமொழி எளிதாக வென்றார், இப்பொழுதும் கடற்கரை பகுதிகள் திமுக வசம் இருக்கின்றன
இதில் பல குழப்பமும் சுவாரஸ்யமும் உண்டு
பாதிரி சர்கஸ் கலைஞன் போல் தாவி தாவி, புலி, தமிழ், திமுக, மோடி எதிர்ப்பு என பல சாசங்களை செய்து கொண்டிருந்தவர்
மிக பெரிய பணத்தை அதில் அவர் ஈட்டினார், அந்தரத்தில் ஆடை இல்லாமல் செத்த இயேசுவின் பாதிரி , அக்கால அப்போஸ்தலர்கள் மாற்றுடை இல்லாமல் கால்கள் தேயதேய நடந்த சபையின் பாதியான கஸ்பருக்கு இப்போதுள்ள சொத்துக்கள் மதிப்பு செட்டி நாட்டு கணவான்களை விட அதிகம்
அவரை வசமாக வளைத்து திமுக வென்றதா? இல்லை திமுகவினை வளைத்து கஸ்பர் பலம் பெற்றாரா என்பது விக்ரமாதித்தன் வேதாளம் பதில் சொல்ல வேண்டிய கேள்வி
ஆனால் கிறிஸ்தவ மேலிடத்தின் அனுமதி இல்லாமல் ஒரு பாதிரி இவ்வளவு தூரம் இந்திய எதிர்ப்பு காரியம் செய்ய முடியாது
ஆக கிறிஸ்தவம் அதுவும் கத்தோலிக்க கிறிஸ்தவம் தென் தமிழ்நாட்டில் எவ்வளவு பெரும் இந்துவிரோத இந்தியவிரோத காரியங்களை செய்கின்றது , எவ்வளவு பெரும் திட்டத்துடன் திமுகவுடன் தமிழ் அமைப்புக்களுடன் கைகோர்த்திருகின்றது என்பதற்கு கஸ்பர் ஒரு உதாரணம்
இவரை போல் ஆயிரம் கஸ்பர்கள் உண்டு
இப்படித்தான் ஈரானிலும் இன்னும் சில நாடுகளிலும் கத்தோலிக்கம் சில வல்லரசு துணையுடன் ஒருமாதிரி சில்லறை அரசியல் செய்தது
அதை மிக தைரியமாக பிடுங்கி எறிந்தான் ஈரானின் கோமேனி, சீனாவில் மாவோ டெங் ஆகியோர் செய்தனர்
இந்தியாவும் தமிழகம் அமைதியாக இருக்க வேண்டுமென்றால் அது இந்தியாவோடு நீடித்திருக்க வேண்டுமென்றால் இம்மாதிரி பாதிரி, கத்தோலிக்கம், திமுக கூட்டணி மேல் ஒரு கண் வைத்திருக்கட்டும்
1960களிலே கோவாவில் அடைபட்ட கிறிஸ்தவனுக்காக போப்பாண்டவரிடம் பிரார்த்தித்தான் அண்ணாதுரை, அந்த பாசம் இன்றளவும் தொடர்கின்றது
இதில் இந்திய அரசு வாடிகனுக்கு தன் எச்சரிக்கையினை செய்யலாம், தமிழக கத்தோலிக்க பாதிரிகள் அரசியலில் வீண் போராட்டத்தில் தலையிட்டால் அம்மதம் தடை செய்யபடும் என பகிரங்கமாக எச்சரிக்கலாம்
அதை இந்திய அரசு செய்யும் என நம்புவோம்
எப்படியோ சுமார் 25 வருடகாலமாக தன்னை எதிர்க்க யாருமில்லை என சீமானின் பெரியப்பா மகன் போல் சுற்றி வந்த கஸ்பர் எனும் போலி பாதிரிக்கு முதல் அடி கொடுத்துள்ளார் சுப்பிரமணியன் சாமி அவருக்கு வாழ்த்துக்கள்
(நாம் தமிழக பத்திரிகை, சர்வதேச பத்திரிகையில் வந்த செய்திபடி இதை தந்துள்ளோம், இது போக கஸ்பர் பற்றிய மர்மம் ஏராளம் உண்டு, அதையெல்லாம் சுப்பிரமணியன் சாமியிடம் கேட்டு கொள்ளவும்)
Discussion about this post