அங்கு உருவான சிறு குறை காரணமாக இரண்டு நாட்கள் இடையில் உற்பத்தி தடைபட்டிருந்தது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தென்மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 316 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. தினமும் சராசரியாக 30 டன் வரை ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள 2 ஆக்சிஜன் உற்பத்தி பிரிவில், ஒரு பிரிவில் மட்டுமே தற்போது ஆக்சிஜன் உற்பத்தி நடந்து வருகிறது. இந்நிலையில் 2வது உற்பத்தி பிரிவிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. பராமரிப்பு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு நேற்று முதல் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
சோதனை ஓட்டம் முடிந்தபிறகு 2வது உற்பத்தி பிரிவிலும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும். இதனால் ஒரு நாளைக்கும் மொத்தம் 70 டன் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். மீதம் உள்ள ஆக்சிஜனை, வாயு நிலையிலேயே சிலிண்டர்களில் அடைப்பதற்கான உபகரணங்களும் அமைக்கப்பட்டு வருவதால் அந்த பணிகளும் ஒரே வாரத்துக்குள் முடிக்கப்பட்டு சிலிண்டர்களிலும் ஆக்சிஜன் நிரப்பும் பணி தொடங்கப்படும் என தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post