கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து தருமாறு எனது வேண்டுகோளை ஏற்று அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
இதுகுறித்து அவர் தனது சுட்டுரை பக்க பதிவில் கூறியிருப்பதாவது:
கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 28.5.2021 அன்று அறிக்கை வாயிலாக மாண்புமிகு முதல்வர் அவர்களை கேட்டுக் கொண்டிருந்தேன்.
எனது வேண்டுகோளை ஏற்று அதற்கான அறிவிப்பினை 29.5.2021 அன்று வெளியிட்ட முதல்வர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
Discussion about this post