தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கினாலும், தினசரி பாதிப்புகளில் தலைநகர் சென்னையை விட கோவையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிராக ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேகை பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Discussion about this post