“கேரள அரசு அறிவித்த விருது வேண்டாம்” என்கிற ரீதியில் பாலியல் புகார் புகழ் வைரமுத்து அறிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்கள் முன் கேரள அரசின் உயரிய விருதான ஓ.என்.வி விருதை வைரமுத்துவிற்கு வழங்குவதாக அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து மலையாள திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. “மீ டூ” பாலியல் புகாரில் சிக்கிய வைரமுத்துவிற்கு நம் மாநிலத்தின் உயரிய விருதா?” என மலையாள திரையுலகினர் கொந்தளிக்க துவங்கிவிட்டனர். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பாலியல் புகாரில் சிக்கியவருக்கு விருது தருவது நியாயமில்லை என குரல் அளித்து வந்த நிலையில் வைரமுத்து’விற்கு அறிவித்த விருதை மறுபரிசீலனை செய்யப்போவதாக விருது வழங்கும் அகாடமி அறிவித்தது.
எப்படியும் விருது வழங்கமாட்டார்கள் என தெரிந்துக் கொண்ட வைரமுத்து தானே முந்திக்கொண்டு “விருது வேண்டாம்” என தற்பொழுது அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“அனைவரையும் வணங்குகிறேன்.
கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.
என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்”
என வழங்கப்படாத, மறுபரிசீலனையில் உள்ள விருதை பெருந்தன்மையுடன் பாலியல் புகார் வைரமுத்து திரும்ப அளித்தார்.
Discussion about this post