தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் கோவை ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி பணிகள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் ஜூன் 7ஆம் தேதி முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதை தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவை, ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Discussion about this post