கருப்புபூஞ்சையைமுதல்வரின்மருத்துவக்காப்பீடுதிட்டத்தில்சேர்க்கவேண்டுமெனஓ.பன்னீர்செல்வம்கோரிக்கைவிடுத்துள்ளார்.
தமிழகத்தில் இதுவரை கருப்புப் பூஞ்சை நோய்க்கு 400 போ பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு அடுத்ததாக கருப்பு பூஞ்சை நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு நோய்க்கு ஸ்டீராய்டு மருந்து அதிகம் கொடுப்பதன் விளைவாக கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது .
மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், கருப்பு நிறத்தில் ரத்தம் வடிவது இதன் அறிகுறிகள்.
இதனால் கண் மற்றும் மூளை நரம்புகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை கருப்புப் பூஞ்சை நோய்க்கு, 400 போ பாதிக்கப்பட்டுள்ளனா்.
சென்னையில் 111 பேரும், வேலூரில் 74 பேரும், கோவையில் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனி வார்டுகளை அமைக்க தமிழக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்தவும், மருத்துவ ஆலோசனை வழங்கவும், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு தலைமையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளைச் சோந்த மருத்துவா்கள் உள்பட 13 அடங்கிய நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது.
காது, மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணா்கள் டாக்டா் மோகன் காமேஸ்வரன், பாபு மனோகா், தொற்று நோய் சிகிச்சை நிபுணா்கள் டாக்டா் சுப்ரமணியன் சுவாமிநாதன் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
கருப்பு பூஞ்சை தொற்று நோய் அல்ல என்றும், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால் நோயை குணப்படுத்த முடியும் என மருத்துவர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். எனவே அறிகுறி தென்பட்டதும் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கருப்பு பூஞ்சை பரவல் அதிகரிக்கும் பட்சத்தில் அதை சமாளிப்பது என்பது அரசுக்கு மிகப்பெரிய சவலாகிவிடும்.
எனவே கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தினை போதுமான அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும், இந்நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post