கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுக்க, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு ஜனநாயக நாட்டில், மக்களுடைய மனப்போக்கை அறிந்து, அதன்படி நடக்க எவ்வளவு பலம் பொருந்திய சட்சியாக இருந்தாலும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் போறிஞர் அண்ணா அவர்கள். போறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப, பலம் பொருந்திய மாபெரும் மக்கள் இயக்கமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கடிகம் எதிர்க்கட்சியாக இருக்கின்ற இந்தச் சூழலில், மக்களின் மனப்போக்கை அரசிற்கு படம் பிடித்துக் காட்ட வேண்டியது எனது கடமை என கருதுகிறேன்.
கடந்த ஒராண்டிற்கும் மேலாக கொரோனா உயிர்க்கொல்லி நோய் உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது என்றாலும், கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாட்டு மக்கள் ஒருவித அச்ச உணர்வோடு வாழ்கின்ற சூழ்நிலை நிலவுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு குறைந்தாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மக்களிடையே ஒரு பதற்றத்தை தோற்றுவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை சராசரியாக 20 விழுக்காடு என்ற நிலையில் உள்ளது என்று பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, 100 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தினால் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஆனால், மேற்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிற்கும் மேலாக உள்ளதாகவும், கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 35 விழுக்காட்டினர் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் செய்தி வெளிவந்துள்ளது.
28-5-2021 நாளைய காலை நிலவாப்படி, கோயம்புத்தூரில் மட்டும் 4,734 நபர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் மாவட்டம்தான் தமிழ்நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 33,361 நபர்களுக்கு 28-5-2021 காலை நிலவரப்படி தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 11,584 நபர்கள் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். மேற்கு மண்டலத்தில் மட்டும் 126 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன இதை நான் இங்கு சுட்டிக்காட்டுவதற்குக் காரணம், மேற்கு மண்டலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.
கொரோனா நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பொறுத்த வரையில், 28-5_-2021 அன்று காலை நிலவரப்படி, தமிழ்நாட்டில் மட்டும் 474 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுவதற்குக் காரணம் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதம், அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகள் கிடைப்பதில் உள்ள காலதாமதம் ஆகியவையே. கடந்த சில நாட்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அதிகரிக்கப்பட்டு இருந்தாலும், புதிதாக பாதிப்போர் தினழும் மருத்துவமனைகளை நாடி வருவதால்,படுக்கைகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதே சமயத்தில் காத்திருக்கும் நேரம் சற்று குறைந்திருப்பதாகவும் சென்னை ராஜீல் காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வர் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. சென்னை பொது மருத்துவமனையிலேயே இந்த நிலைமை என்றால், ஊரகப் பருதிகளிலுள்ள மருத்துவமனைகளில் உள்ளநிலைமையை நினைத்துப் பார்க்கவே முடியாது.
கொரோனா நோய்த் தொற்று அதிகமாக இருக்கும் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருப்பதையும், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள தனியாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமித்து இருப்பதையும் நான் அறிவேன்.
இருப்பினும், படுக்கை வசதிகளை அதிகரிப்பது, தங்குதடையின்றி ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி கிடைக்சு வழிவகை செய்வது, அவசர சிகிச்சைப் பிரிவில் எளிதாக படுக்கை வசதி கிடைக்க ஏற்பாடு செய்வது, மருந்துகள் தடையின்றி கிடைக்க வழிகோலுவது, தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்துவதது ஆகியவைதான் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்கக் கூடியவை, எனவே, உபிரிழப்புகளை உடனடியாகத் தடுக்கும் வகையில், நோய்த் தொற்றின் வேகத்திற்கா ஏற்ப அரசின் செயல்பாடு இருக்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இதுமட்டுமல்லாமல், சில குடும்பங்களில் தாய், தந்தை இருவருமே கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள சூழ்நிலையில், அவர்களுடைய குழந்தைகள் கவனிப்பாரற்று இருக்கின்றனர்.
கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்ததால், உறவினர்கள்கூட அந்தக் குழந்தைகளைச் சென்று பார்க்கத் தயக்கம் காட்டும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெற்றோர்களை இழந்து பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குத் தேவையானவற்றை செய்து கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
Discussion about this post