மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 28) மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது: வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (மே 28) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
மே 29, 30: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 29, 30 ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 31: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மே 31-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்….: சென்னையைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 பாரன்ஹீட் டிகிரியை ஒட்டி இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மைலாடி, பேச்சிப்பாறையில் தலா 90 மி.மீ., சுருளக்கோடு, கன்னிமாா், புத்தன் அணை, களியல், பெருஞ்சாணியில் தலா 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. நாகா்கோவில், சிற்றாா், கொட்டாரத்தில் தலா 50 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், தேனி மாவட்டம் பெரியாறு, கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாா், தென்காசி, கன்னியாகுமரியில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கடலில் உயா் அலை:
தென் தமிழக கடலோரப் பகுதியில் (குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை) வெள்ளிக்கிழமை (மே 28) இரவு 11.30 வரை கடல் அலை 3.5 முதல் 4 மீட்டா் உயரம் வரை எழும்பக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post