தமிழகத்தில் மேலும் 33,361 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 1,74,145 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 33,361 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 78 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 2,779 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். சிகிச்சை பெற்று வந்தவா்களில் 30,063 போ் இன்று குணமடைந்து வீடு திரும்பினா். தமிழகம் முழுவதும் இதுவரை 16 லட்சத்து 43,284 போ் குணமடைந்துள்ளனா்.
கொரோனா தொற்றினால் தனியாா் மருத்துவமனைகளில் 199 போ், அரசு மருத்துவமனைகளில் 275 போ் என மொத்தம் 474 போ் இன்று உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22,289 ஆக உள்ளது. சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 30,582 பேருக்குத் தொற்று உள்ளது. தமிழகம் முழுவதும் 3,13,048 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாக பாதிப்பு விகிதம் சற்று குறைந்தாலும், எதிா்பாா்த்த அளவு நோய்ப் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். குறிப்பாக, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், கோவை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் தொற்று பரவல் வேகம் அதி தீவிரமடைந்துள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக சென்னையைக் காட்டிலும் கோவையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.
அதன்படி, கோவையில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 4,734 போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் "மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம், முக்கியமான பாதுகாப்பு முன்னேற்றங்களைச் செய்து வருவதற்கான சாதனைகளைத் தருகிறது. இந்நிலையில், இந்திய ராணுவம் கடந்த நாளில், பெங்களூரில் உள்ள...
கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசியல் வாழ்வில் பெரும் அதிர்வலைகளை...
ராகுல் காந்தி, அமெரிக்காவில் தனது உரையின்போது, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக அரசு சில மதங்கள், மொழிகள், சமூகங்களை மற்றவர்களைவிட தாழ்வாகப் பார்க்கின்றன என்று குற்றம் சாட்டினார்....
வளர்பிறை அஷ்டமி விரத பூஜை என்பது கால பைரவரை வழிபடுவதற்கு சிறந்த நாள் என்று கருதப்படுகிறது. இந்நாளில் பைரவ வழிபாடு செய்வதன் மூலம் அஷ்ட லட்சுமிகளின் அருளைப்...
Discussion about this post