சேலையில் அழகாக இருக்கிறாய், ஆனால் சேலை இல்லாமல் இருந்தால் அதைவிட நீ ரொம்ப அழகாக இருப்பாய் என வாட்ஸ் ஆப்பில் 59 வயதான ராஜகோபாலன் மாணவிகளுக்கு மெசேஜ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம் ஆசிரியர் போன்று கல்வி போதிக்கும் குருக்களுக்கு அழகா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை பத்ம சேஷாத்ரி பால பவனில் வணிகவியல் துறையில் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் ராஜகோபாலன்.
59 வயதான இவர் நங்கநல்லூரில் மனைவி, தாய் உள்ளிட்டோருடன் வசித்து வருகிறார்.
இவர் 11, 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து இவர் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தவறு
இந்த நிலையில் அவரை கைது செய்த போது தான் எந்த தவறையும் செய்யவில்லை என சாதித்தார். மேலும் மாணவிகள் அனுப்பிய ஆதாரங்களை காண்பித்தவுடன் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டார். அது போல் அவரது மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அழிப்பு
அதில் ஏராளமான விஷயங்கள் அழிக்கப்பட்டதாக தெரிகிறது. இவற்றை சைபர் கிரைமில் கொடுத்து ரிக்கவரி சாப்ட்வேர் மூலம் போலீஸார் தகவல்களை எடுத்துள்ளனர். அவரது வாட்ஸ் ஆப் சாட்டுகளை எடுத்து பார்த்தால் போலீஸாரையே தலைசுற்ற வைத்துள்ளதாம்.
மாணவிகள்
வாட்ஸ் ஆப்பில் மாணவிகளுக்கு அவர் அனுப்பிய தகவல்களை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசமாக உள்ளதாக கூறுகிறார்கள். சாதாரண போன் செய்தால் ரெக்கார்டு செய்யப்பட்டால் மாட்டிக் கொள்வோம் என நினைத்த ஆசிரியர், மாணவிகளின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு கால் செய்துள்ளார்.
சேலை கட்டிய புகைப்படம்
மாணவிகளுக்கு முதலில் அனுப்பும் மெசேஜ்களின் அடிப்படையில் அவர்கள் பதில் தருவதை பொறுத்து அடுத்தடுத்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். அதில் அவர் அனுப்பிய மெசேஜ்களில் மாணவியின் புகைப்படத்தை அனுப்புவார், அதிலும் சேலை கட்டியிருக்கும் புகைப்படத்தை அனுப்ப சொல்வாராம்.
ஆபாசம்
மாணவி அனுப்பிவிட்டால் அதனை பார்த்து விட்டு “நீ சேலையில் நன்றாக இருக்கிறாய். ஆனால் அந்த சேலை இல்லாவிட்டால் இன்னும் அழகாக இருப்பாய்” என கொஞ்சமும் வயதுக்கும் தொழிலுக்கும் ஒவ்வாத வகையில் பேசுவாராம். வெறும் 16,17 வயது குழந்தைகளிடம் 59 வயதுள்ள ராஜகோபாலன் எப்படி இத்தகைய ஆபாசமாக பேசினார் என தெரியவில்லை. முதலில் எப்படி அவருக்கு மனம் வந்தது என்றும் தெரியவில்லை.
Discussion about this post