பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் ராஜேஷ் தாஸை கைது செய்ய வலியுறுத்தி கடந்த பிப்ரவரி மாதம் கனிமொழி தலைமையில் போராட்டம் எல்லாம் நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ராஜேஷ் தாஸ் கைது செய்யப்படுவார் என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை எல்லாம் வெளியிட்டார். ஆனால் 3 வாரங்கள் ஆகியும் தற்போது வரை எதுவும் நடக்கவில்லை.
தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் பெண் எஸ்பி ஒருவரை காரில்ஏற்றி பாலியல் தொந்தரவு அளித்த புகார் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. புகாருக்கு உள்ளான டிஜிபிக்கு எதிராக விசாரணை நடத்த அப்போதைய அதிமுக அரசு குழு அமைத்தது. ஆனால் ராஜேஸ் தாஸ் கைது செய்யப்படவோ அல்லது அவர் மீது வழக்கோ பதிவு செய்யப்படவில்லை. இதனை அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 28ந் தேதி சென்னையில் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
ராஜேஷ் தாஸை கைது செய்ய வேண்டும் என்று அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியது. ராஜேஷ் தாஸ் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் ராஜஷ் தாஸ் கைது செய்யப்படுவார் என்றும் ஸ்டாலின் அப்போது அறிக்கை வெளியிட்டார். இதற்கிடையே தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன் பிறகு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு சஸ்பென்ட் செய்யப்பட்டது.
பிறகு பெண் எஸ்பி அளித்த பாலியல் புகார் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையை துரிதப்படுத்திய போலீசார் ராஜேஷ் தாஸ் அவருக்கு உடந்தையாக இருந்த புகாரில் சிக்கிய எஸ்பி உள்ளிட்டோரை அழைத்து விசாரித்தனர். ஆனால் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெண் எஸ்பி அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கு கிணற்றில போட்ட கல்லாக கிடக்கிறது. அதிமுக ஆட்சியில் ராஜேஷ் தாஸை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்திய கனிமொழி தற்போது இது குறித்து எந்த தகவலையும் வெளியிடாமல் மவுனம் காக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ராஜேஷ் தாஸ் கைது செய்யப்படுவார் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது தயக்கம் ஏன்…?. ஆனால் ராஜேஷ் தாஸ் தற்போது வரை கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி போலீசாரும் வேறு வேலையில் பிசியாக இருப்பது போல் தெரிகிறது.
பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச். ராஜா, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிறகு, செய்தியாளர்களிடம் கருத்து...
காங்கிரஸ் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாக பிரதமர் மோடி விமர்சித்தார். கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறி...
பூஜைகள் மற்றும் வழிபாட்டின் போது, சில பூக்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பதற்கான காரணங்கள் பலவாக இருக்கின்றன. இதற்கு வேதங்கள், பரம்பரை நம்பிக்கைகள், மற்றும் பண்பாட்டு குறிப்புகள் ஆகியவை முக்கிய...
Discussion about this post