சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜகோபாலன். இந்நிலையில் அண்மையில் மாணவிகள் சிலர் , இவர் பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வந்து பாலியல் தொல்லைகள் கொடுப்பதாகவும் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு பெண்களின் தாயாக எனக்கு மிகவும் கவலையாக இருக்கும். பள்ளியில் அவர்களை யாரும் துஷ்பிரயோகம் செய்ய மாட்டார்கள் என நம்பிக்கையோடு இருப்பேன்.
அதிர்ஷ்டவசமாக அவர்களது பள்ளி அனுபவம் சிறந்ததாக அமைந்தது. ஆனால் தற்போது அவ்வாறு அனைவருக்கும் அமைவதில்லை.
குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பியவுடன் அம்மாக்கள் அவர்களிடம் பேச வேண்டும். அவர்களது நடத்தை மாற்றத்தை கவனிக்க வேண்டும். அவர்கள் பள்ளி செல்ல மறுத்தால் ஏன் என்று கேளுங்கள். நீங்கள் தான் அவர்களது சிறந்த நண்பர் எனக் கூறுங்கள். பள்ளியிலிருந்து இதுபோன்ற கதைகளைக் கேட்பது இது முதல்முறை அல்ல. ஆனால் எதிர்காலத்தில் அவற்றை நாங்கள் கேட்க மாட்டோம் என நம்புகிறோம். சமுதாயத்தில் கூட்டாக நாம் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.
தமிழக முதல்வர் மற்றும் கல்வியமைச்சர் இது குறித்து நன்கு விசாரணை மேற்கொண்டு, இரக்கமின்றி கடுமையான தண்டனை கொடுக்க அனுமதிக்க வேண்டும். நம் குழந்தைகளை பாதுகாக்க ஒரு வழியை காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
Discussion about this post