தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது. மேலும் தமிழகத்தில் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதிக்கும் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கிலும் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் இன்று முதல் மே 31-ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் முதல் தவணை 2 ஆயிரம் நிவாரணம் பெறாதவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post