தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு கட்சியில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.தேர்தலில் தோல்விக்குப் பிறகு கமல்ஹாசனின் அணுகுமுறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. அவர் மாறுவார் என்ற நம்பிக்கையும் இல்லை. தற்போது வரை கட்சியிலிருந்து துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் ராஜினாமா செய்துள்ளனர். சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கமல்ஹாசன் கூட வெற்றி பெற முடியாத சூழலில் மொத்த கூடாரம் காலியாகி விட்டது.
இந்நிலையில் மக்கள் நீதி மையத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக மக்கள் நீதி மையம் பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் அறிவித்துள்ளார்.
மருத்துவர் மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம், பத்மபிரியா கட்சியிலிருந்து விலகிய நிலையில் தற்போது சி.கே.குமரவேலும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
Discussion about this post