தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து மே-2 வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதையடுத்து முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்றார். ஆனால் அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்ற நோக்கில் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ளார். மேலும் தேர்தலில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்தும் அதிமுகவில் ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களுடைய பணியை செய்யாமல் மெத்தனமாக இருந்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
Discussion about this post