தமிழகத்தில் கொரோனா 2வது அலைமிகத் தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ” தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், தேனி ,திண்டுக்கல், நீலகிரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம்.
அதே போல் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.மே 23 ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள், தேனி, கோயம்புத்தூர் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மே 24ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 25ம் தேதி கன்னியாகுமரி ,தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யலாம்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும் நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post