முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக்கூடாது என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்புவதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு தமிழீழ ஆதரவாளர்கள் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், 7 கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யக் கூடாது என்பதில் எப்போதுமே விடாப்பிடியாக இருப்பவர் சுப்பிரமணியன் சுவாமி. இப்போதும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதைப் பாருங்கள்:
ராஜீவ்காந்தியை தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்ததாக உச்சநீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 7 கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்று நான் குடியரசுத் தலைவருக்கு நான் கடிதம் அனுப்புகிறேன்.
ராஜீவ்காந்தி மட்டுமல்லாது இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 18 போலீஸ்காரர்கள் உயிரிழந்தனர். இவ்வாறு ஒரு பதிவில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து மற்றொரு பதிவில் ராஜீவ் காந்தி குடும்பம் மட்டுமே, குற்றவாளிகளை மன்னிப்பதற்கு முடியாது என்று கூறி உள்ளார் சுப்பிரமணியம் சுவாமி.
Discussion about this post