கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோட்டில் கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் உடலை கிராம பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் அடக்கம் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா நோய் தோற்றால் இறந்தவர்களின் உடலை வாங்குவதற்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் தயக்கம் காட்டி வரும் மனிதநேயமற்ற செயலும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
இன்னும் சில இடங்களில் உறவினர்களே இறந்தவர்களின் உடலை அரசிடம் ஒப்படைத்து விடும் அவல நிலையும் ஏற்பட்டு வருகிறது.
இதுபோன்று கொரோனா தோற்றால் இறந்தவர்களின் உடலை சில தொண்டு நிறுவனங்கள் அடக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் குமரி மாவட்டம் அதங்கோடு கிராமத்தில் 60 வயது மதிக்கத்தக்க இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவர்களின் உடலை வாங்க உறவினர்கள் தயக்கம் காட்டியுள்ளனர்.
இந்த தகவலை அறிந்த மெதுகும்மல் கிராம பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார், பஞ்சாயத்து கவுன்சிலர் ஜவஹர், ஒன்றிய பா.ஜ.தமிழகதமிழகதமிழகக பொதுச்செயலாளர் அசோக்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் இருவரின் உடலையும் அடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளனர். இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நோய் தொற்றை விரட்ட வேண்டுமே ஒழிய இறந்தவர்களின் உடலை கூட அடக்கம் செய்ய முன்வராத மனிதநேயமற்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபடக்கூடாது என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post