திருப்பூர் அம்மா உணவகத்தில் தி.மு.க எம்.எல்.ஏ வருகைக்காக பொதுமக்கள் ஒரு மணி நேரம் ‘டிபன்’ கிடைக்காமல், காத்திருந்த சம்பவம் அங்குள்ள மக்களை எரிச்சலடைய செய்துள்ளது.
திருப்பூர் நல்லுாரில் உள்ள, அம்மா உணவகத்தில், திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செல்வராஜ் நேற்று காலை ஆய்வு செய்ய வருவார் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
வழக்கமாக காலை 7 மணிக்கு, டிபன் சாப்பிடு வதற்காக வந்த மக்கள், டோக்கன் வழங்கிய பின் வரிசையில் நிறுத்தப்பட்டனர். எம்.எல்.ஏ வந்த பிறகுதான் உணவு வழங்கப்படும் என உணவக பணியாளர்கள் கூறினர். பின் காலை 8 மணிக்கு, எம்.எல்.ஏ வந்தார்.
அவருக்கு, உணவக ஊழியர்கள் ஆரத்தி எடுத்தனர், உணவுக்கூடம், விற்பனை கவுன்டரை பார்வையிட்ட பின், பொது மக்களுக்கு ‘டிபன்’ விநியோகித்தார்.
அங்கிருந்த தோசைக்கல்லில் வார்த்து விட்டு பின் இட்லியை ருசி பார்த்தார். பின்னர் இட்லி இன்னும் ருசியாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறிவிட்டு புறப்படு சென்றார்.
அவர் வரும் வரை மக்கள் காத்திருந்தது மட்டுமின்றி திமுகவினர் சமூக இடைவெளியும் கடைபிடிக்காமல் நின்றிருந்தனர்.
Discussion about this post