கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் உயிரிழந்தார்.தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்றுக்கு முதல் உயிரிழப்பு இதுவாகும்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்துள்ள நரசிம்மபுரத்தை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் (57) இவருக்கும் இவரது மனைவிக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதால் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், அவருக்கு ( வெல்டிங் பட்டறை உரிமையாளர்) தனது கண்களை திறக்க இயலாமல் அவதிப்பட்டதை சி.டி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவருக்கு கண்களில் கருப்பு பூஜ்சை தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் வியாழக்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
Discussion about this post