இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டுமென, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோயில் நிலையங்கள், கட்டடங்களின் விவரங்கள், கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள், விழா போன்ற தகவல்களை மக்கள் பார்வையிடும் வகையில் இணையத்தில் வெளியிட வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Discussion about this post